தினகரன் 06.07.2010
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாராட்டு விழா கோவை நகரம் எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும் கமிஷனர் பேச்சு
கோவை, ஜூலை 6: கோவை மாநகரம் எப்போதும் தூய் மையாக இருக்கவேண்டும். அதற்கேற்ப தொழிலாளர்கள் பணியாற்றவேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், உலக தமிழ் செம் மொழி மாநாட்டில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பாராட்டு நற்சா ன்று வழங்கும்விழா நேற்று நடந்தது. இதில் 1,423 தொழிலாளர்களுக்கு சான்று வழ ங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் கோவை மாநகராட்சி கமிஷனர் அன் சுல் மிஸ்ரா பேசியதாவது;
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் துப்புரவு தொழிலாளர்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும் என தெரிவித்தோம். இதற்கேற்ப தொழிலாளர்கள் மிக சிறப்பாக பணியாற்றினார் கள். மாநாடு நடந்த 5 நாளிலும் தொழிலாளர்கள் சிறப்பாக உழைத்தார்கள். மாநாட்டிற்கு வந்த பொதுமக்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் மாநாடு வளாகத்தின் தூய்மையை கண்டு வியப்படைந்தார்கள். பல லட்சம் மக்கள் வந்து சென்றும், மாநாடு வளாகம் சுத்தமாக காணப்பட்டது. மாநாடு உணவகம் மற்றும் பல்வேறு பகுதியில் குவிந்த குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டது. இதற்கு தொழிலாளர்கள் சிறப்பாக பணியாற்றியது தான் முக்கிய காரணம். மாநாட்டிற்கு வந்தவர்கள் மாநகராட்சியின் பணிகளை பாராட்டி சென்றுள்ளார்கள். பத்திரிக்கைகள் கூட, மாநாட்டின் சுகாதார பணிகளை பாரா ட்டி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதற்காக தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவி த்து கொள்கிறேன். இனி வரும் காலங்களில் மாநகரம் எப்போதும் தூய்மையாக இருக்கவேண் டும். அதற்கேற்ப தொழிலாளர்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த் திக் ஆகியோர், “மாநாடு நடந்தபோது துப்புரவு தொழிலாளர்கள் சுகாதார பணிகளில் சிறப்பாக செயல்பட்டனர். மாநாடு வளாகம் தூய்மை பகுதியாக காட்சியளித்தது, ” என பாராட்டினர்.
இவ்விழாவில் மாநகர பொறியாளர் கருணாகரன், மேற்பார்வை பொறியாளர் பூபதி, செயற்பொறியாளர் கணேஷ்வரன், உதவி கமிஷனர்கள் சவுந்திரராஜன், பொன்முடி, நகர் நல அலுவலர் (பொறுப்பு) அருணா, மண்டல தலைவர் பைந்தமிழ், கவுன்சிலர்கள் நந்தகுமார், தமிழ்செல்வி, ராஜேந்திர பிரபு, ராஜேந்திரன், காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.