தினமலர் 07.01.2010
துப்புரவு பணியாளர்களுக்கு அழைப்பு‘
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்களில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் “”தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்” அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் நலவாரியத்தில் பதிவு செய்யாத பணியாளர்கள் பதிவு செய்து பயனடையலாம் என கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்..