தினமலர் 01.04.2010
துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் தனியார் மயம் : கம்பம் நகராட்சியில் அமல்படுத்த முடிவு
கம்பம் : கம்பத்தில் போதிய எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், பொது சுகாதார பராமரிப்பு பணிகளை தனியார் மயமாக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கம்பத்தில் 33 வார்டுகள் உள்ளன. தினமும் 23 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகிறது. ஒரு நபர் 400 கிராம் வரை குப்பைகளை போடுகிறார். குப்பைகளை சேகரம் செய்வதற்கு டிப்பர் லாரிகள், நவீன லாரியும் உள்ளது. திடக்கழிவு மேலாண் மை திட்டத்தில் குப்பைகளை பிரித்து அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சாக்கடையை பொறுத்தவரை நகரில் 108 கி.மீ., நீளத்திற்கு உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாததால், தினமும் சுத்தம் செய் யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
சாக்கடை சுத்தம் செய் தல், குப்பைகள் அள்ளுதல் போன்ற பணிகளை மேற் கொள்ள தேவையான அளவு துப்புரவு பணியாளர்கள் இல் லை. எனவே பொதுச்சுகாதாரத்தை தனியார் மயமாக்க கம்பம் நகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக நகரில் 30 சதவீத பகுதிகளில் பொதுச்சுகாதாரத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பணியிடம் 16 பேர் வரை காலியாக உள்ளது. இன்னும் சிலர் இந்த மாதம் ஓய்வு பெறுகின்றனர். புதிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத் தில் 30 சதவீத பகுதியை தனியார் மயமாக்க அரசு அனுமதி உள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி மற்றும் கூடலூர் நகராட்சிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக கம்பம் நகரில் பத்து வார்டுகளில் பொதுச் சுகாதார பணிகளை தனியார் மயமாக்கப்பட உள் ளது. பத்து வார்டுகளுக்கு தேவைப்படும் சுகாதாரப்பணியாளர்கள், அவர்களுக்குரிய சம்பளம், இதர படிகள், போக்குவரத்து ஆகிய செலவினங்களை கணக்கிட்டு, டெண்டர் கோரப்படும், இதில் குறைவான டெண்டர் கோருபவர்களுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.