தினமலர் 30.05.2013
துப்புரவு பணியாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியீடு
சிவகங்கை:””இளையான்குடி பேரூராட்சியில், துப்புரவு பணியாளர் காலிபணியிடங்களுக்கு, பதிவு மூப்பு விபரம் வெளியிடப்படும்,” என, வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார். கல்வி தகுதி, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருத்தல் அவசியம். வயது: குறைந்த பட்சம் 1.1.2013ல் 18 ஆகவும், அதிக பட்சம் 1.1.2013ல் பகிரங்க போட்டியினர் 30ம், பிற்பட்ட, மிக பிற்பட்டோர் 32, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். இனச்சுழற்சி, மிக பிற்பட்டோருக்கான முன்னுரிமையற்றோர். இத்தகுதியுள்ள பதிவுதாரர்கள், மே 31 அன்று, காலை 10 மணிக்கு, கல்விசான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் நேரில் வந்து, பதிவு மூப்பு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்,’ என்றார்.