தினமலர் 07.04.2010
துப்புரவு பணியை நகராட்சியிடம் ஒப்படைக்க தொழிலாளர்கள் மனு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் நடத்தி வரும் துப்புரவு பணி முழுவதையும் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திண்டுக்கல் நகராட்சியில் பல இடங்களில் துப்புரவு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. தனியாரிடம் 300க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து துப்புரவு பணியை தனியாருக்கு விடக்கூடாது. நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.அவர்கள் கூறியதாவது: நாங்கள் எட்டு ஆண்டுகளாக தனியாரிடம் துப்புரவு பணி செய்கிறோம். தினமும் 35 ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த ஒரு சில மாதமாக மட்டும் 80 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. வேறு எந்த பணப்பலன்களும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. பல்வேறு வகையில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே நகராட்சி வசம் துப்புரவு பணியை ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்