துறையூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு ஜூலை வரை நிறுத்தம்
துறையூர்: துறையூர் நகராட்சியில் ஜூலை மாதம் வரை புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கபட மாட்டாது என்று ஆணையர் மதிவாணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
துறையூர் நகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக 1999ம் ஆண்டு பகிர்மான குழாய் பதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி தனது ஆய்வில் நகரில் அமைக்கப்பட்ட பகிர்மானக்குழாய் சீராக அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. எனவே புதிய பகிர்மானக்குழாய் அமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை மாதத்திற்குள் பணியை முடிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே நகராட்சியில் யாருக்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்க முடியாது. இவ்வாறு ஆணையர் மதிவாணன் கூறினார்.