தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதன் துவக்க நிகழ்ச்சியில் கமிஷ்னர் ஆணையர் மதுமதி முன்னிலை வகித்தார். மேயர் சசிகலாபுஸ்பா தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மழை நீரை சேமிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோஷம் எழுப்பி சென்றனர். மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்தணக்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.