தினத்தந்தி 30.07.2013
தூத்துக்குடி மாநகராட்சி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் மேயர் சசிகலா புஷ்பா தகவல்
பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மேயர் சசிகலா புஷ்பா
தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பயிற்சி மையம்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், ஜின் பாக்டரி ரோட்டில் உள்ள
மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையம்
செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 2013–14–ம் ஆண்டுக்கான
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் 7–9–2013 அன்று முதல் தொடங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் 18–8–2013–ந் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவ–மாணவிகளுக்கு 1–9–2013 அன்று
மாதிரி தேர்வு மற்றும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
போட்டித் தேர்வுகள்
போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவ–மாணவிகளும் இலவச பயிற்சி பெற
விண்ணப்பிக்கலாம். இலவச பயிற்சி வகுப்பு மற்றும் விண்ணப்பங்கள் குறித்த
தகவல்களை 90478 55151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
இவ்வாறு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.