தினத்தந்தி 16.08.2013
தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: மேயர் சசிகலாபுஷ்பா தேசிய கொடியேற்றினார்
தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினவிழா
கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி தலைமை
தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் எல்.சசிகலாபுஷ்பா கலந்து
கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவையொட்டி அனைவருக்கும் இனிப்பு
வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி துணை
மேயர் சேவியர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மற்றும்
கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.