தினத்தந்தி 13.11.2013
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாடுகளை ரோடுகளில்
சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை ஆணையாளர் மதுமதி எச்சரிக்கை

விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் சோ.மதுமதி
தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி
இருப்பதாவது:–
கால்நடைகள்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள்
சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு
ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில்
சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி
நாளை(வியாழக்கிழமை) முதல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில்
சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, பாரத பிராணிகள் வாரியத்தில்
அங்கீகாரம் பெற்ற விலங்கின அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்.
ரோடுகளில்.
அவ்வாறு பிடிபடும் மாடுகளை மீண்டும் பெறுவதற்கு கோர்ட்டில் மனு செய்து,
அதன்மூலம் மட்டுமே மாட்டை பெற முடியும். ஆகையால் பொதுமக்கள் தங்கள் மாடு
உள்ளிட்ட கால்நடைகளை ரோடுகளில் சுற்றித்திரியாத அளவுக்கு வளர்க்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மதுமதி
தெரிவித்து உள்ளார்.