தினகரன் 06.09.2010
தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
திண்டுக்கல், செப். 6: திண்டுக்கல்லில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிராணிகள் நலச்சங்கம் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக லட்சுமிசுந்தரம் காலனி, குமரன்நகர், சிலுவத்தூர் ரோடு, நத்தம் ரோடு, ஒற்றைக்கண் பாலம், ஆர்.வி.நகர், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுற்றித்திரிந்த 35 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.
பிராணிகள் நலச்சங்க செயலர் ரமேஷ் தலைமையில் ஷாஜகான், சாகுல், நாகராஜ் கொண்ட குழுவினர் நாய்களை பிடித்து நகராட்சி அறுவை சிகிச்சை கூடத்திற்கு கொண்டு வந்தனர். சென்னை கால்நடை டாக்டர் தனபாலன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார். நகர்நல அலுவலர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன், உதவியாளர் தனுஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.