தினமணி 01.04.2013
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
திருப்பத்தூர் நகரில் பெருகி வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக பேரூராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு சனிக்கிழமை கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பேரூராட்சித் தலைவர் ஆர்.சோமசுந்தரம், செயல் அலுவலர் சங்கரநாராயணன் ஆலோசனையின் பேரில் நாய்களைப் பிடிக்க சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் திருப்பத்தூர் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 60-க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து வந்தனர்.
இவைகளுக்கு அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் சதீஷ்குமார் தலைமையில் மருத்துவர்கள் விஸ்வநாதன், பாலகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்தனர்.