தினமலர் 10.06.2010
தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
புதுச்சேரி : தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியில் நகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. புதுச்சேரி நகர மன்ற தலைவி ஸ்ரீ தேவி, நகராட்சி கமிஷனர் அசோகன் ஆகியோர் உத்தரவின் பேரில், தெருக்களில் சுற் றித்திரியும் நாய்களை பிடிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு இடையூராக தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்தும் வகையில் நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய் யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தெருவில் விடப் பட்டது.
கால்நடை மருத்துவ அதிகாரி காந்திமதி மேற் பார்வையில் தெரு நாய் களை பிடிக்கும் பணியில் 10 பேர் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். முதலியார்பேட்டை, முருங்கப்பாக்கம், தேங் காய்திட்டு பகுதிகளில் சுற்றித்திரிந்த 30க்கும் மேற் பட்ட நாய்கள் பிடிக் கப் பட்டன.கால்நடை மருத்துவர் காந்திமதி கூறுகையில்,”கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 300 நாய்கள் பிடிக் கப் பட்டு கருத்தடை செய்யப் பட்டுள்ளது. வாரம் ஒரு முறை ஒரு ஏரியாவில் நாய் கள் பிடிக்கும் பணி மேற் கொள்ளப்பட்டு வருகின் றது. குறிப்பாக வெறிநாய் களை இனம் கண்டு அவற்றை பிடிப்பதில் தீவிர அக்கறை செலுத்தப் பட்டு வருகிறது‘ என்றார்.