தினமணி 24.09.2013
தெற்குப்பாளையத்தில் தார்ச் சாலை அமைக்க பூமிபூஜை
தினமணி 24.09.2013
தெற்குப்பாளையத்தில் தார்ச் சாலை அமைக்க பூமிபூஜை
பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலூர்
கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தெற்குப்பாளையத்தில் புதிய தார்ச்
சாலை அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள 13-ஆவது வார்டுக்குட்பட்ட காந்தி நகரில் பேரூராட்சி பொது
நிதியின் கீழ் ரூ.6.20 லட்சம் செலவில் புதிய தார்ச் சாலை அமைக்க தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற தார்ச் சாலை
அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் அ.அறிவரசு
தலைமை வகித்து பணியைத் தொடங்கி வைத்தார். பேரூராட்சித் துணைத் தலைவர்
ஆர்.செல்வராஜன், வார்டு கவுன்சிலர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஊர்க்கவுண்டர் கிட்டுசாமி, கவுன்சிலர்கள் ஜெயராஜ், கவிதா
துரைராஜ், முருகானந்தம், காந்தி நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள்,
மகளிர் குழு நிர்வாகிகள், பேரூராட்சி பொறியியல் உதவியாளர் ராஜேந்திரன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.