தின மணி 22.02.2013
தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம், கைரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பணிக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் மற்றும் பொன்மலை கோட்ட அலுவலகங்களில் பிப். 22, 23, 24 ஆகிய மூன்று நாள்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் இந்த மூன்று நாள்களிலும் 1, 2, 3, 4 ஆகிய நான்கு வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். பொன்மலை கோட்ட அலுவலகத்தில் 30, 31, 34 ஆகிய மூன்று வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது வீடுகளில் வழங்கப்பட்ட ரசீதுடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் போன்றவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
வெளியூரில் இருந்து திருச்சி இடம் பெயர்ந்துள்ள, இதுவரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இடம்பெறாதவர்கள் புகைப்படம் எடுக்கும் இடங்களிலேயே படிவங்களை வாங்கி நிரப்பி வருவாய் உதவியாளர்களிடம் அளிக்கலாம்.