தின மணி 22.02.2013
கடலூர் நகரில் புதிதாக வந்தவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து நகர்மன்ற ஆணையர்(பொறுப்பு) ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் நகரில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை கொண்டு தேசிய அட்டை வழங்குவதற்காக முதல் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விடுபட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக கடலூர் நகருக்கு புதிதாகக் குடிவந்தவர்களை கணக்கெடுப்பு செய்ய வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் தங்கள் வீடு தேடி வரும்போது அவர்களுக்கு பொதுமக்கள் சரியான விவரங்களைத் தெரிவித்து அடையாள அட்டை வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.