தினமணி 20.07.2010
தேர்தல் பிரசாரம்: இன்று மாலை நிறைவுதிருச்சி
, ஜூலை 19: திருச்சி மாநகராட்சி 28-வது வார்டுக்கான இடைத்தேர்தலையொட்டி பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.தேர்தல் ஆணைய விதிமுறைப்படி
, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்னதாக அதாவது செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு நாளான 22-ம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.வாக்குகளைப் பதிவு செய்ய வரும் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட
14 ஆவணங்களைக் கொண்டு வந்து வாக்குகளைப் பதிவு செய்யலாம்.வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள பொன்மலை கோட்ட அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்
. வருகிற 24-ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இத் தகவலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான த.தி. பால்சாமி தெரிவித்தார்.