தினகரன் 31.05.2010
தேவாரம் பேரூராட்சி கூட்டம்
தேவாரம்: தேவாரம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம், தலைவர் பெருமாள் தலைமையில் நடந்தது. நிர்வாக அலுவலர் கணேசன், துணைத்தலைவர் மகாராசன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை வழங்குவது, வார்டு பகுதியில் உள்ள பொது சுகாதார பிரச்னைகள் நிதி ஆதாரம் கிடைத்தவுடன் செயல் படுத்துவது, நான்கு ரத வீதியில் மூடியுடன் கூடிய வடிகால் அமைப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.