தினகரன் 05.10.2010
தொடக்க விழாவில் மேயர் புறக்கணிப்பு மாநகராட்சியை ஓரம் கட்டியதற்கு ஷீலா மன்னிப்பு கேட்க வேண்டும்
புதுடெல்லி
, அக். 5: காமன்வெல்த் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் மேயர் புறக்கணிக்கப்பட்டதற்கு முதல்வர் ஷீலா தீட்சித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, மாநில பா.ஜ. தலைவர் வலியுறுத்தியுள்ளார்.இதுபற்றி டெல்லி மாநில பா
.ஜ. தலைவர் விஜேந்தர் குப்தா, மாநகராட்சி முன்னவர் சுபாஷ் ஆர்யா ஆகியோர் கூறியதாவது:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது
, நகரின் மேயர்தான் ஜோதியை வரவேற்பார். ஆனால், இங்கு, டெல்லியில் ஜோதி நுழைந்தபோது கூட மேயர் பிருத்விராஜ் சகானிக்கு எந்த அழைப்பையும் மாநில அரசு விடுக்கவில்லை. இதற்கும் மேலாக, போட்டி தொடக்க விழாவில் விருந்தினராக கலந்துகொள்ளக்கூட மேயருக்கு அழைப்பு விடுக்கவில்லை.வி
.ஐ.பி. கேலரியில் அவருக்கு இருக்கைக்கூட ஒதுக்கப்படவில்லை. அதனால், மேயர் சகானி, தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள வில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய கவுரவத்தைக் கொடுக்காதது, அவரை அவமானப்படுத்தியதற்கு சமம்.காமன்வெல்த் போட்டியில் முதல்வர் அரசியல் நடத்துவதற்கும்
, போட்டியால் விளையும் அனைத்து புகழையும் தானே எடுத்துக்கொள்ள முயற்சிப்பதற்கும், போட்டிக்காக பல்வேறு பணிகளை செய்தபோதும் மாநகராட்சியை புறக்கணித்ததற்கும் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.விளையாட்டு கிராமம் சுத்தமில்லாமல் இருப்பதாக பிரச்னை கிளம்பியபோது
, அதையும் மற்ற மைதானங்களையும் சுத்தப்படுத்தும்படி மாநகராட்சி ஊழியர் கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால், தொடக்க விழாவின்போது ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடியின் பேச்சிலோ, நன்றியுரையிலோ போட்டிக்கான பணிகளில் மாநகராட்சியின் பங்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை அவமானப்படுத்திவிட்டு, எல்லா சிறப்பையும் தனக்கே எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் முதல்வர் ஷீலா தீட்சித் மன்னிப்பு கேட்க வேண்டும்.மேயர் மற்றும் மாநகராட்சி புறக்கணிக்கப்பட்ட விஷயத்தை ஆளுநர் தேஜேந்திர கன்னா
, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை பா.ஜ. எழுப்பும். இவ்வாறு அவர்கள் கூறினர்.