தினமலர் 24.08.2010
தொரப்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
பண்ருட்டி : தொரப்பாடி பேரூராட்சியில் சாலை பணி தேர்வு செய்வது குறித்து கவுன்சிலர்களின் அவசரக் கூட்டம் நடந்தது. ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமார் முன் னிலை வகித்தார். கூட்டத் தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரகாஷ், சரஸ் வதி, தி.மு.க., கவுன்சிலர்கள் சுந்தரவடிவேல், ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு சாலைகள் திட்டம் 2010 – 2011ம் ஆண்டிற்கு சாலைகள் பணிகள் தேர்வு செய்து குறித்து கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடந்தது. பின் மேட்டாமேடு தார்சாலை, பாரதியார் தெரு, தெராப்பாடி மாரியம்மன் கோவில் தெரு, வெள்ளத்து மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை, ஆதிதிராவிடர் காலனி சாலை உட்பட 11 பணிகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.