தினகரன் 24.08.2010
தொரப்பாடி பேரூராட்சி சிறப்பு கூட்டம்
பண்ருட்டி, ஆக. 24 : தொரப்பாடி பேருராட்சியின் அவசர கூட்டம் நடந்தது. பேருராட்சி தலை வர் ஜெயலட்சுமி துரைராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அருணாசலம் வரவேற்றார். கவுன்சிலர்கள் ராஜேஷ்குமார், சுந்தரவடிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு சாலைகள் திட்டம், சாலைகள் அபி விருத்தி பணிகள் மேற் கொள்ள பணிகள் தேர்வு செய்து, பேருராட்சி மன்றத் தின் அனுமதிக்கு வைப்பது ஆகிய பணிகள் செய்வது சம்பந்தமாக உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.