தினமணி 26.09.2013
தினமணி 26.09.2013
தொழில் வரியை உயர்த்த திருப்புவனம் பேரூராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தொழில் வரியை
உயர்த்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் வசந்தி சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது.
செயல் அலுவலர் முனியான்டி மற்றும் வார்டு கவுன்சிலர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
அதன்பின் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளை
தெரிவித்துப் பேசினர். இதற்கு தலைவர் மற்றும் செயல் அலுவலர் பதிலளித்தனர்.
இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன விவரம்:
திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும்
தொழில் வரியை அக்டோபர் மாதம் முதல் 35 சதவீதமாக உயர்த்தி வசூலிக்க முடிவு
செய்யப்படுகிறது.
மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு
நிதியிலிருந்து ரூ 3 லட்சம் செலவில் திருப்புவனம் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளிக்கு சமையல் கூடம் மற்றும் மத்திய அமைச்சர் வாசன் தொகுதி
மேம்பாட்டு நிதியின் மூலம் நகரில் 1ஆவது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் ரூ 3
லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வாளாகம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.