தினமணி 31.08.2010
தொழில் வரி செலுத்த மாநகராட்சி கெடு
சென்னை
, ஆக. 30: சென்னை மாநகராட்சியில் தொழில் வரி செலுத்துவோர் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி மாநகராட்சி எல்லைக்குள் பணிபுரியும் மத்திய
, மாநில அரசு அலுவலர்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள், நிறுவனங்கள், தனியார் விளம்பர நிறுவனங்கள், கம்பெனிகள், தொழில்புரிவோர், விற்பனை வரி செலுத்துவோர் என அனைவரும் 2010-11-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான தொழில் வரி மற்றும் நிலுவைகளை காசோலையாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ (டி.டி.) “வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி‘ என்ற பெயரில் செலுத்த வேண்டும்.உரிய காலத்துக்குள் தொழில் வரியினை செலுத்தத்தவறினால்
, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதத் தொகையுடன் தொழில் வரி வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.