தினமணி 18.06.2013
தினமணி 18.06.2013
நகரங்களிலும் அம்மா உணவகங்கள்
மாநகரங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கிவரும்
அம்மா உணவகங்களை ஏழை, நடுத்தர மக்கள் நலன்கருதி நகரங்களிலும் தொடங்க
வேண்டும் என தமிழக அரசுக்கு மதச் சார்பற்ற ஜனதாதளம் கோரிக்கை
விடுத்துள்ளது.
குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியாத்தம் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க
நகரையொட்டி புறவழிச்சாலை அமைக்க வேண்டும், விண்ணப்பித்துள்ள தகுதியான
அனைவருக்கும் உடனடியாக ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர். சண்முகம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் எம். தண்டபாணி வரவேற்றார்.
மாவட்ட பொதுச்செயலர்கள் ஜி. நடராஜன், எம். முனிசாமி, மாவட்டச் செயலர்
எஸ். ராம்லால் சர்மா, கட்சியின் மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் கே. சுயராஜ்,
ஆம்பூர் நகரத் தலைவர் வி. முருகானந்தம், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் எம்.
ராஜாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.