தினமணி 04.06.2009
நகராட்சியிடம் கொடைக்கானல் ஏரி ஒப்படைப்பு

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
கொடைக்கானல் ஏரியின் கட்டுப்பாடு மீன்வளத் துறைக்கு 10 ஆண்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏரியின் கட்டுப்பாடு அந்தத் துறை வசமே இருந்து வந்தது.
இந்த நிலையில், ஏரியின் சூற்றுச்சூழல் மற்றும் அழகை பாதுகாக்கும் பொருட்டு அதன் கட்டுப்பாட்டை நகராட்சி வசம் கொண்டு வர, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் நகல், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டது.
இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்த தமிழக அரசு, கொடைக்கானல் ஏரியின் கட்டுப்பாட்டை நகராட்சியிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது. மீன் வளர்த்தல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவை மீன் வளத்துறை வசமே தொடர்ந்து இருக்கும்.