தினமலர் 11.03.2010
நகராட்சியில் சொத்து வரி செலுத்த கெடு
ராமநாதபுரம் : “”ராமநாதபுரம் நகராட்சியில் வரிகளை உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என, நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ராமநாதபரம் நகராட்சி பகுதியில் சொத்து, காலிமனை வரி, குடிநீர் கட்டணங்கள் பாக்கி உள்ளவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். மார்ச் இறுதிக்குள் தங்களது வரி பாக்கிகளை செலுத்த வேண்டும். தொடர்ந்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துகள் ஜப்தி செய்வதுடன் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்கள் வரிபாக்கிகளை செலுத்தி நகராட்சியில் திட்டப்பணிகள் தொய்வின்றி நடக்க உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார்.