தினமணி 28.05.2013
நகராட்சியில் நுகர்வோர் பாதுகாப்புக் கூட்டம்
கடலூர் நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு காலாண்டு கூட்டம் அண்மையில் நடந்தது. நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஆணையர் காளிமுத்து முன்னிலை வகித்தார். நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் மெய்யழகன், நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சிவராஜ், நெல்லிக்குப்பம் தேவநாதன், வழக்கறிஞர் கதிர்வேல், இஸ்ரேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். நகராட்சியை சேர்ந்த கழிப்பிடங்கள் கட்டண விவரம் வெளியிட வேண்டும். இறப்பு, பிறப்பு சான்றிதழ்களை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.