நகராட்சியில் பெண்கள் தின விழா
பெரியகுளம் நகராட்சியில், பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் 2012-13 இன் கீழ், சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் ஓ. ராஜா தலைமை வகித்தார். ஆணையர் (பொறுப்பு) வி. சுப்பிரமணியன் வரவேற்றார். பெண்கள் முன்னேற்றத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா (ஆரோக்கிய அகம், ஆண்டிபட்டி), சாந்தினி (எஸ்ஆர்இடி-தர்மத்துப்பட்டி) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, பெண்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மற்றும் பெண்கள் உரிமைகளும், சட்டங்களும் என்ற தலைப்பில் பேசினர்.
மேலும், முத்தமிழ் கலைக் குழுவினரின் பெண்கள் விழிப்புணர்வு குறித்த நாடகங்கள் நடத்தப்பட்டது. இதில், விழிப்புணர்வு குறித்த பாடல்களையும் பாடினர். விழாவில், நகராட்சியின் கீழ் செயல்படும் 100-க்கும் மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, நகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் எம். செல்வன், வீ. வீரம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.