தினமலர் 28.06.2010
நகராட்சி அலுவலகம் செல்லாமல் பிறப்பு, இறப்பு சான்ற பெற வசதி
போடி:போடி பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் செல் லாமலேயே வெப்சைட் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போடியில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்பு சான்றிதழினை இலவசமாக நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இதற் காக ஆஸ்பத்திரிகளில் தினமும் விவரம் சேகரிக்கப் பட்டு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
சில நேரங்களில் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் உரிய சான்றிதழ்களை பெற சிரமம் அடைந்து வருகின்றனர். சிலர் அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி குறிப்பிட்ட தொகை கறந்து விடுகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் தற்போது பிறந்தவர்களுக்கும், ஜூன் 24 , 1987ம் ஆண்டு முதல் பிறந்து பதிவு செய்தவர்களும் நகராட்சி அலுவலகம் வராமலே வெப்சைட் மூலம் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ இ சர்வீசஸ்.டிஎன். ஜிஓவி. இன்/ முனிசிபாலிட்டி என்ற பாஸ் வேர்டு மூலம் பார்த்து உரிய சான்றிதழ்களை பிரிண்ட் அவுட் வுட் எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகராட்சிகளிலும் இந்த நடைமுறையினை கொண்டு வர வேண்டும்.