தினகரன் 30.08.2010
நகராட்சி அலுவலகம், பாலம் திறப்பு விழா ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
ஆவடி, ஆக. 30: பட்டாபிராம், திருநின்றவூர், செங்குன்றம், வெள்ளவேடு, புண்ணியம் கிராமம் பகுதிகளில் ரூ31.17 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 மேம்பாலங்கள் திறப்பு விழா மற்றும் ஆவடி நகராட்சி அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 மேம்பாலங்கள் மற்றும் ஆவடி நகராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக, ஆவடி நகர எல்லையான பருத்திப்பட்டில் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட திமுக செயலாளர் சிவாஜி எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி நகர செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் நிர்வாகிகள் ருக்கு, ராஜேந்திரன், சவுந்தர், ருக்குமணி, சன் பிரகாஷ், உதயகுமார், வக்கீல் சேகர், மா.சேகர், பொன் விஜயன், வி.சிங்காரம், சன் ரமேஷ், கா.மு.ஜான், தென்றல் மகி உட்பட பலர், தாரை, தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
ஆவடி நகராட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த ஸ்டாலினை நகராட்சி தலைவர் விக்டரி மோகன், ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி, பொறியாளர் குருசாமி, நகரமைப்பு அதிகாரி முரளி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் வரவேற்றனர். திருவேற்காடு அடுத்த காடுவெட்டியில் திருவேற்காடு நகரமன்ற தலைவர் பிரபு கஜேந்திரன், நகர செயலாளர் எம்.இ.கே.மூர்த்தி, குமாரசாமி, சாது, கவுன்சிலர் உமாபதி ஆகியோர் தலைமையில் 600க்கும் மேற்பட்டோர் மேள, தாளங்கள் முழங்க வரவேற்றனர்.