தினமலர் 04.05.2010
நகராட்சி அலுவலர் மாநில கூட்டம்
மேலூர்: தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை வகிக்க, மாநில பொது செயலாளர் கண்ணன் வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் தாமோதரன் நிதி அறிக்கை சமர்ப்பித்தார். மாநில துணைத் தலைவர் குழந்தை வேலு, மாநில அமைப்பு செயலாளர் பரமசிவன் உட்பட நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில், நகராட்சி அலுவலர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்பி, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். மூன்றாம் நிலை நகராட்சிகளில் ஊழியர்களை நியமித்து, முழு அளவிலான நகராட்சியாக செயல்படுத்த வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி மே 28ல் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நடத்துவது. கோவையில் நடைபெறும் செம் மொழி மாநாட்டிற்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வர வசதியாக, அன்று பொது விடுப்பாக அறிவிக்க வேண்டும். ஜூலை மாதத்தில் புதுக் கோட்டையில் தமிழ்நாடு நகராட்சி மாநில மாநாடு நடத்துவதுஉட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சந்திரன் நன்றி கூறினார்.