தினமலர் 17.05.2010
நகராட்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரத்தில் கட்டப்படும் எரிவாயு மின் தகன மேடை கட்டமைப்பு களை நகராட்சிகளின் கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் நகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் பங்களிப்பில் ஒரு கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை மையம் கட்டப்படுகிறது. கே.கே., ரோடு சுடுகாடு பகுதியில் பூங்கா இயற்கையான சூழல்களுடன் நவீன எரி வாயு தகன மேடை கட்டும் பணி நடந்து வருகிறது. முன் மாதிரியாக நடந்து வரும் இத்திட்டப் பணிகளை நேற்று விழுப்புரம் வந்த நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் பிச்சை ஆய்வு செய்தார். திட்ட பணிகளின் செலவினங்கள், கட்டமைப்பு வசதிகளைக் கேட்டறிந்தார். பின் பழைய பஸ் நிலையம், சென்னை சாலையில் நகராட்சி நடுநிலைப் பள்ளி புதிய கட்டடங்கள், கீழ்பெரும்பாக்கம் ஆரம்ப பள்ளி கட்டட பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன் உடனிருந்தனர்.