தினமணி 26.03.2010
நகராட்சி சார்பில் ஜப்தி
திண்டிவனம், மார்ச் 25: திண்டிவனம் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வரி வசூலில் வரி செலுத்தாத வணிக வளாகம் ஒன்றை வியாழக்கிழமை ஜப்தி செய்யும் நடவடிக்கை நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவின் பேரில், தீவிர வரி வசூல் நகராட்சி அதிகாரிகளால் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கணக்காளர் ரவி, வருவாய் உதவியாளர் சண்முகம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ஜோதிபாசு உள்ளிட்டோர் வரி செலுத்தாத வணிக வளாகங்களில் இருந்த பொருள்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் ரூ.1 லட்சம் வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதே போல் வரி செலுத்தாத அனைத்து கடை மற்றும் வணிக வளாகங்களில் ஜப்தி நடவடிக்கை தொடருமென கூறினர். எனவே, இதனை தவிர்க்க நகராட்சிக்கு பாக்கி வரி செலுத்த வேண்டியவர்கள் விரைவில் செலுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.