தினமணி 08.05.2013
நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவச சீருடை
கடலூர் நகராட்சியில், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்களை, தனியார் அமைப்பு, இலவசமாக வழங்கியுள்ளது.
வாலாஜா அக்ரோ நிறுவனம் இத்தொழிலாளர்களுக்கு சீரூடை, கையுறை, மண்வெட்டி உள்ளிட்ட துப்புரவுப் பணிக்குத் தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கியுள்ளது. கடலூர் நகராட்சியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் குமரகுருபரன் இதை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
வாலாஜா அக்ரோ நிறுவன பிரதிநிதிகள் பாலசுப்பிரமணியன், உத்தரவேல், கார்த்திகேயன், நகராட்சி துப்புரவு உதவி ஆய்வாளர் எஸ்.பாக்கியநாதன், மேற்பார்வையாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.