தினமலர் 09.08.2010
நகராட்சி பணியாளர்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தல்
தேனி: நகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்கி கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என நகராட்சி அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் சங்க எழுச்சி நாள் விழா தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடந்தது. நகராட்சி அலுவலர் சங்க கிளை துணை தலைவர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார்.கிளை செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநில தலைவர் ராமமூர்த்தி சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். அறிவிக்கப்பட்ட அரசாணைப்படி நகராட்சி ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.நகராட்சிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பவும், புதிய பணியிடங்கள் உருவாக்க வேண் டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. புதுக் கோட்டையில் செப்டம்பர் 24, 25 ல் நடக்கும் சங்க மாநில மாநாட்டிற்கு முதல்வர், துணை முதல் வரை அழைக்கவும் செயற் குழுவில் முடிவு செய்யப் பட்டுள்ளதாக மாநில தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனி உட்பட பலர் பேசினர்.