தினமலர் 28.04.2010
நகராட்சி பணியாளர்கள் நியமிக்க வலியுறுத்தல்
கூடலூர்: கூடலூர் நகராட்சியில் பற்றாக்குறையாக உள்ள பணியாளர்களை உடனடியாக நிரப்பக்கோரி நகராட்சி அலுவலர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு நகராட்சி அலுவலர்கள் சங்கத்தின் கூடலூர் கிளை துவக்கவிழா மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. கூடலூர் நகராட்சியில் பற்றாக்குறையாக உள்ள பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோருவது, ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவது, ஊழியர்களுக்கு கருவூலத்தின் மூலம் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூடலூர் நகராட்சி அலுவலர்கள் சங்க தலைவராக சாமுவேல், செயலாளராக சரவணன், பொருளாளராக முருகேசன், துணைத்தலைவர்களாக சின்னமுருகன், அறிவழகன், துணைச்செயலாளர்களாக ராஜா, பூபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.