தினமலர் 05.01.2010
நகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம்: நகராட்சி கூட்டத்தில் முடிவு
மதுராந்தகம்:மாம்பாக்கம் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மதுராந்தகம் நகராட்சி சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் மலர்விழிகுமார் தலைமையில் நடந் தது.துணைத் தலைவர் பிரேம்சந்த் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும் துணைத் தலைவர் பிரேம் சந்த் எழுந்து, நகராட்சியில் குடிசைப் பகுதிக்கு முதல் முறையாக இலவச கலர் “டிவி‘ வழங்கி உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பரசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என்றார்.அதைத் தொடர்ந்து, அனைத்து கவுன்சிலர்கள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாம்பாக்கம் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் சமையல் அறையுடன் கூடிய இருப்பு அறை கட்டடம் கட்ட நான்கு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதியிலிருந்து மோச்சேரியில் ரேஷன் கடை கட்ட இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.