தினகரன் 04.09.2010
நகரில் உள்ள அனைத்து சாலைகளும் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு எம்.எம்.ஆர்.டி.ஏ. திடீர் முடிவுமும்பை,செப்.4: மும்பையில் அனைத்து சாலைகளும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் நகரில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப் படுகிறது. இதற்கு மாநகராட்சி தான் காரணம் என்று எம்.எம்.ஆர்.டி.ஏ. குற்றம் சாட்டுகிறது. அதே சமயம் இதற்கு எம்.எம்.ஆர்.டி.ஏ. தான் காரணம் மாநகராட்சி குற்றம் சாட்டிக்கொண்டிருக் கிறது.
இந்நிலையில், இப்பிரச் னைக்கு தீர்வுகாண எம்.எம்.ஆர்.டி.ஏ. கட்டுப்பாட் டில் இருந்தத 13 சாலைகள் மாநக ராட்சியிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எம்.எம்.ஆர்.டி.ஏ.விடம் தற்போது அந்தேரி ஜே.பி.சாலை மற்றும் அந்தேரி& காட்கோபர் இணைப்பு சாலைகள் மட்டும் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளும் தொடர்ந்து மாநில பொதுப் பணித் துறையிடம் இருக்கும். இதற்கிடையே, சாலையில் உள்ள குழிகளை நிரப்ப மாநகராட்சி மேலும் 20 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது.
நகரில் தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட் டதால் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டு செலவு செய்யப்பட்டுள்ளது.