தினகரன் 04.06.2010
நகரில் திரிந்த பன்றிகள் விரட்டியடிப்பு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை
சிவகாசி ஜுன்
4: சிவகாசி நகராட்சி பகுதியில் பொது சுகாதாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்த 10க்கும் மேற்பட்ட பன்றிகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.சிவகாசி நகராட்சி பகுதியில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது
. நகரில் அவ்வப்போது சுற்றி திரியும் பன்றிகளை நக ராட்சி ஊழியர்கள் பிடித்து, அவற்றை வளர்ப்பவர்களு க்கு அபராதம் விதித்து வருகின்றனர்.நேற்று நகராட்சி சுகா தார துறையினர் சிறுகுளம் காலனி
, காமராஜர் ரோடு, புது காலனி, ஆயில்மில் காலனி பகுதிகளில் சுற்றி திரிந்த 10க்கும் மேற்ப்பட்ட பன்றிகளை பிடித்து திருவில்லிபுத்து£ர் வனப் பகுதியில் விட்டனர்.சிவகாசி நகரில் பொது சுகாதாரத்திற்கும்
, போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகராட்சி நிர் வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.