தினகரன் 29.09.2010
நகரை அழகுபடுத்தும் திட்டம் விருத்தாசலத்தில் பணிகள் தீவிரம் பொதுமக்கள் வரவேற்பு
விருத்தாசலம், செப். 29: விருத்தாசலம் நகரை அழகுபடுத்த ரூ 12 கோடியில் பணிகள் தொடங்கி, சுறு, சுறுப்பாக நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக விருத்தாசலம் உள்ளது. நகரில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில், செராமிக் தொழிற்பேட்டை, அரசு மருத்துவமனை,அரசு தனியார் கல்லூரிகள், பத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளிகள், நகராட்சி, கோட்டாட்சியர்,வட்டாட்சியர் அலுவலகங்கள், கோர்ட், காவல்துறை அலுவலகங்கள் என அதிக அலுவலகங்கள் இருப்பதால் பல்வேறு பணிகளுக்காக தினம் ஆயிரக் கணக்கில் மக்கள் நகருக்கு வருகின்றனர். விருத்தாசலம் நகரை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருப்பதால் அவர்கள் தேவைகளுக்கு இங்குதான் வரவேண்டும் இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகராக இருக்கிறது.
நகருக்கு அருகில் உள்ள நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள், இரண்டு சிமெண்ட் ஆலை கள், இரண்டு சர்க்கரை ஆலைகள், செராமிக் தொழிற்பேட்டை ஆகியவற்றுக்கு செல்லும் வாகனங்கள் என போக்குவரத்து நெரிசல் அதி கம் உள்ள நகராக உள் ளது. இதனால் நகரில் அடிக்கடி சாலை விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. நகரை அழகுபடுத்த வேண்டும் என்பது விருத்தாசலம் நகர மக்களின் நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகிவிட்டது.
விருத்தாசலம் நகரை அழகுபடுத்த ரூ 12 கோடியில் பணி தொடங்கப்பட்டுள்ளது. நகரை அழகு படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை யில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்பட்ட முடி வின் படி நகரில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் அகற்றும் பணி நடந்து வரு கிறது. மேலும் கோட்டாட்சி யார் தலைமையில் அனைத்து கட்சியினர், வியாபாரிகள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் கூட் டம் நடத்தப்பட்டு அதன்படி போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ள தலைவர்களின் சிலை கள், கொடிகம்பங்களை அகற்றி ஒரே இடத்தில் வைப் பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் நகரின் முக்கிய சாலைகளான ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு, கடை வீதி, விருத்தகிரீஸ்வரர் கோயில் பகுதியில் உள்ள சாலைகள்அகலப்படுத்தி, சென்டர் மீடியா அமைத்து, சாலையின் இருபுறமும் நடைபாதைகள் அமைக்கப்படவுள்ளது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கார், ஆட்டோ ஸ்டாண்ட்டுகள் என அனைத்தையும் முறைப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள் ளது. நகரின் இதய பகுதியாக உள்ள பாலக்கரை பகுதியும் அழகுபடுத்த திட்டம் தாயாரிக்கப்பட்டுள்ளது. இப் பணிகள் அனைத்தும் நிறைவேறியவுடன் விருத்தாசலம் நகரம் அழகிய நகராக மாறும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.