தினமணி 29.03.2013
நகர்ப்புற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் நகர்ப்புற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றன.
முகாமை நகர்மன்ற தலைவி சுமித்ராரவிக்குமார் துவக்கி வைத்தார். ஆணையர் சரவணன் பயிற்சி குறித்து விளக்கினார். இதில் தையல், நர்சிங், டி.டி.பி உள்ளிட்ட கணினி பயிற்சிகள், 3க் அனிமேசன் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் 450 பேர் பயிற்சி பெற்றனர். தமிழகத்தில் தலைசிறந்த நிறுவனங்களில் இருந்து வந்த பயிற்றுநர்கள் பயிற்சிகளை வழங்கினர்.