தினமணி 07.04.2017
நகர்ப்புற வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது தமிழகம்: வெங்கய்ய நாயுடு
புதுதில்லி: நகர்ப்புற வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று பேசிய போது அவர் கூறியதாவது: –
நாட்டிலே அதிகமாக 24,245 சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில்தான் உள்ளன.
சுய உதவிக் குழுக்கள் மூலம் உதவி புரிவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இதன் மூலம் 30,258 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன்
வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.