தினமலர் 09.02.2010
நகர ஊரமைப்பு துறை பிரச்னையா? இன்று நேரில் புகார் தெரிவிக்கலாம்
கோவை : லே–அவுட், ரிசர்வ் சைட், கட்டட அனுமதி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நகர ஊரமைப்புத்துறை இயக் குனரிடம் இன்று புகார் தெரிவிக்கலாம்.கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தில் கோவை மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதிகளில் புதிய லே–அவுட், வணிக கட்டடம் போன்றவற்றுக்கு இந்த குழுமமே அனுமதி தர வேண்டும்.
மாஸ்டர் பிளான் தயாரிப்பு, திட் டச்சாலை அமைப்பது, கட்டமைப்பு கட்டணம் வசூலிப்பது, அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளும், இந்த உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு உள்ளது. ஆனால், இந்த குழுமம் ஆள் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது.இதன் காரணமாக, கட்டடங்கள் மற்றும் நிலங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்குவதில் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, கட்டடம் மற்றும் லே–அவுட் அனுமதி வழங்குவதை, ஒற்றைச் சாளர முறையாக மாற்ற வேண்டுமென்றும் பல தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கை சென்றுள்ளது.இதுபோன்ற கோரிக்கைகளைக் கேட்க, நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால், கோவையில் இன்று மக்களை நேரில் சந்திக்கிறார். கோவை சிவானந்தா காலனி மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள நகர ஊரமைப்புத்துறை அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணியளவில் இயக்குனரைச் சந்தித்து பொது மக்கள் குறைகளைத் தெரிவிக்கலாம