தினமலர் 03.11.2010
நடைபாதை: அதிகாரி அறிவுரைபொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இரண்டு பஸ் ஸ்டாண்டுகளையும் இணைக்கும் சுரங்க நடைபாதை பணிகளை விரைவு படுத்தி நிறைவு செய்ய நகராட்சிகளின் கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தினார். சுரங்க நடைபாதைக்கான கான்கிரீட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததால் பஸ் ஸ்டாண்ட் ரோடு போக்குவரத்திற்கு ரோடு திறக்கப்பட்டுள்ளது. பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில் நகராட்சிகளின் நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகர், மண்டல செயற்பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் நேற்று சுரங்க நடைபாதை பணிகளை பார்வையிட்டனர். நகராட்சி பொறியாளர் மோகன் உடனிருந்தார். அதிகாரிகளிடம் கூடுதல் இயக்குனர் பேசுகையில், “சுரங்க நடைபாதை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதால் “டைல்ஸ்‘ பதிப்பது உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை வேகப்படுத்த வேண்டும். இன்னும் 15 நாட்களில் பணிகளை விரைவுபடுத்தி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்‘ என்று அறிவுறுத்தினார்.