தினமணி 24.08.2010
நடைமேடை பணி தொடக்க விழா
விருத்தாசலம், ஆக. 23: விருத்தாசலம் கடைவீதி மற்றும் பழமலைநாதர் கோயில் பகுதியில் நடைமேடை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
÷விருத்தாசலம் நகரை அழகுபடுத்தும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதைத் தொடர்ந்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் இரு பக்கங்களிலும் நடைமேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
÷இதன்படி கடைவீதி நான்குவழி சந்திப்பு முதல் பழைய அஞ்சல் நிலையம் வரையிலும், பழமலைநாதர் கோயில் முன்புறமும் வடிகாலுடன் கூடிய நடைமேடை அமைக்கும் பணி தொடங்கியது.
÷இப்பணிக்கு நகராட்சி சார்பில் ரூ| 13 லட்சம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் |ரூ 25 லட்சம் என மொத்தம் |ரூ 38 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
÷நகர்மன்ற தலைவர் வ.க.முருகன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் திருவண்ணாமலை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் தில்லைகோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.