தினமணி 14.05.2010
நமக்கு நாமே திட்டம்: வழிகாட்டு நெறிமுறை விளக்கக் கூட்டம்
அரக்கோணம், மே 13: நமக்கு நாமே திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறை விளக்கக் கூட்டம் அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் விஜயராணி கன்னய்யன் தலைமை தாங்கினார். நகர்மன்றத் துணைத் தலைவர் ராஜ்குமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கன்னய்யன், நகராட்சி ஆணையர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் கீழ் எடுத்து செய்யப்படும் பணிகளின் விவரம், பணிகளைத் தேர்வு செய்யும் நடைமுறைகள், நிறைவேற்றும் விவரம், திட்டத்தில் உருவாக்கப்படும் சொத்துக்களை பராமரித்தல், தடை செய்யப்பட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது