தினத்தந்தி 21.08.2013
நம்பியூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம்
நம்பியூர் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த
நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நம்பியூர் பஸ்நிலையத்தில் நடைபெற்றது.
இதற்கு பேரூராட்சி தலைவர் கமலம்நம்பிமணி தலைமை தாங்கினார். பேரூராட்சி
துணைத்தலைவர் சாந்திவரதராஜன், செயல்அதிகாரி மதிவாணன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது சுகாதாரம்
ஆகியவை குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் வார்டு உறுப்பினர்கள் நல்லகுமார், கதிர்வேல், சிவகாமிஅர்ஜூனன்,
சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.