தினத்தந்தி 15.07.2013
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி
பகுதிகளில் உள்ள வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள்,
தொழிற்சாலைகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த தீவிர நடவடிக் கை
எடுக்கப்பட்டு வருகிறது என்று பேரூராட்சி தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, நரசிம்மநாயக்கன்பாளையம்
பூச்சியூர், ராக்கிபாளையம், புதுப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும்
தபால்நிலையம், சமுதாயகூடங்களில் 2 மீட்டர் ஆழம் 1 மீட்டர் அகலமுள்ள மழைநீர்
சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சி
செயல் அலுவலர் குணசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து
வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்கள் வினியோகம் செய்தனர்.
அப்போது மழைநீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி
கூறினார்கள்.