தினமலர் 30.03.2010
நல்லூர் நகராட்சி இன்று கூடுகிறது
திருப்பூர் : நல்லூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது; 133.37 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கான தீர்மானங்கள், விவாதத்துக்கு வைக்கப்படுகின்றன.நல்லூர் நகராட்சியில் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ‘ஈகிள் இந்தியா ஆலோசனை நிறுவனம்‘ ஆய்வு செய்தது. வரும் 30 ஆண்டுகளில் ஏற்படுத்த வேண்டிய உள்கட்டமைப்பு குறித்தும், உடனடியாக அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தும் திட்டங்களும் கூறப்பட்டுள்ளன.குடிநீர் வசதி, பாதாள சாக்கடை மற்றும் மழை வடிகால் வசதி, ரோடு வசதி, தெருவிளக்கு, குடிசை பகுதி முன்னேற்றம், இதர உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இருந்து 2014-15 வரை செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு, ஒவ்வொரு ஆண்டிலும் செய்ய வேண்டியவை அட்டவணைப்படுத்தப்பட்டுள் ளது. நகராட்சியில் செயல்படுத்தும் பணிகளுக்கான வடிவங்களும், சீர்திருத்தங்களும் வழங்கப்பட்டுள் ளன. இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளன. நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார பணியாளர் பற்றாக்குறை அதிகளவில் நிலவி வருகிறது; புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, கூட்டத்தில் விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.