தினமலர் 15.04.2010
நவீன ஆடறுப்பு நிலையம் சங்கரன்கோவிலில் திறப்பு
சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் நேற்று நகராட்சி சார்பில் நவீன ஆடு அறுப்பு நிலையத்தை நகராட்சி தலைவர் பார்வதிசங்கர் திறந்து வைத்தார்.சங்கரன்கோவில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் ஆடு அறுக்கும் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும், சுற்றுப்புறசூழல் துறையிடம் இருந்து அனுமதி பெறாததால் திறக்கப்படாமல் இருந்துவந்தது. தற்போது சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து அனுமதி பெற்றதை தொடர்ந்து நேற்று ஆடு அறுப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.
விழாவில் நகராட்சி தலைவர் பார்வதி சங்கர் ஆடு அறுக்கும் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, நகராட்சி துணை தலைவர் சங்கரன், கவுன்சிலர் நடராஜன், நகராட்சி துப்புரவு அலுவலர் குருசாமி, துப்புரவு ஆய்வாளர்கள் ஜெயபால்மூர்த்தி, வெங்கட்ராமன், ஓவர்சீயர் பட்டுராஜன், திமுக மாவட்ட பிரதிநிதி செல்லப்பா, சங்கரமகாலிங்கம், நகராட்சி மேற்பார்வையாளர் தங்கமாரியப்பன், உதவியாளர் வனமூர்த்தி கலந்து கொண்டனர்.